பீகார் மாநிலத்தை போல் ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் கெலாட் அறிவிப்பு

ஜெய்ப்பூர்: பீகாரை போன்று ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். பீகார் அரசு கடந்த 2ம் தேதி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டது. முதல்வர் நிதிஷ்குமார் அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் வரவேற்றன. சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட் இதனை தெரிவித்தார்.

Related posts

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சியாகிறது: பேரவையில் மசோதா தாக்கல்

செல்போனை திருடியதாக கூறியதால் ஆத்திரம் அண்ணனை கொன்று உடலை எரித்த தம்பி

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு மாஜி அமைச்சரை பிடிக்க கேரளா விரைந்தது தனிப்படை