2011-12ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி தரவுகளை வெளியிடுங்கள்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்

புதுடெல்லி: 2011-12ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘கடந்த 2011-2012ம் ஆண்டு சமூக பொருளாதார மற்றும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவை வெளியிட வேண்டும். இந்த கோரிக்கையை காங்கிரஸ் பலமுறை வலியுறுத்தியும் ஆளும் பாஜக அரசு வெளியிட வில்லை.
புதுப்பித்த ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

மற்ற எதிர்க்கட்சி தலைவர்களைப் போலவே நானும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. கடந்த 2011-12ம் ஆண்டில் 25 கோடி குடும்பங்களை உள்ளடக்கிய சமூக பொருளாதார மற்றும் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முதன்முறையாக நடத்தியது. இருப்பினும், உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், ஜாதிவாரியான தரவை வெளியிடவில்லை.

சமூக நீதி உறுதிப்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம். குறிப்பாக ஓபிசியினருக்கான தரவு முழுமையடையவில்லை. எனவே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது அவசியம்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘2011ம் ஆண்டு அடிப்படையிலான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புத் தகவல்களைப் வெளியிட வேண்டும்’ என்று கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பதிவுத்துறையில் செப்டம்பர் மாதம் வரை ரூ.1, 121 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி

பதிவுத்துறையில் செப்டம்பர் மாதம் வரை ரூ.1, 121 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி

2024-25ம் ஆண்டு அறிவித்த திட்டங்களின் பணிகள் அனைத்தும் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் : தமிழக அமைச்சர்கள் தகவல்