சமூக நீதிக்கான முதல்படி சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தல்

புதுடெல்லி: சமூக நீதிக்கான முதல்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதுதான் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். தெலங்கானாவில் விரைவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டர் சமூக வலைதளத்தில், “ஒரு மாநிலத்தின் சமூக, பொருளாதார நிலைகளை பற்றி தெரிந்து கொள்ளாமல் திட்டங்களை வகுப்பது சாத்தியமில்லை. சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் சமமான வாய்ப்பை பெறுவதை உறுதி செய்ய ஒரேவழி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதுதான். சமூக நீதிக்கான முதல்படியை எடுத்து வைத்துள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும், அவரது அரசுக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்