சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு தேவைப்படும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு தேவைப்படும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி மறுப்பு திருமணம் செய்த பெண், பாதுகாப்பு கோரி சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மனுதாரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. குறிப்பிட்ட முகவரியில் இருவரும் இல்லாததால் சம்மன் சென்றடையவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருவரும் நாளை மறுநாள் காலை வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி வசிப்பிட விவரங்களை வழங்க நீதிபதி உத்தரவிட்டதுடன் தம்பதிக்கு தேவைப்படும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு வழங்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டது.

Related posts

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி

ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்