கேஷ்யூ ஹனி டேட்ஸ்


தேவையானவை:

விதையுள்ள பேரீச்சம்பழம் – 10,
முழு முந்திரிப்பருப்பு – 10,
சர்க்கரை – கால்கப்,
தேன் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

பேரீச்சம்பழத்தை ஒரு புறம் மட்டும் கீறி விதையை நீக்கிவிட்டு, அதனுள் முழுமுந்திரிப்பருப்பை வைத்து மூடவும். (பழம் இரண்டு துண்டுகளாகி விடாமல் பார்த்துக் கொள்ளவும்).சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, அதில் பேரீச்சம்பழங்களை ஊறவிடவும்.அரை மணிநேரம் கழித்து அவற்றை பாகில் இருந்து எடுத்து வைக்கவும். பிறகு தேனை மேலாகவிட்டு, பறிமாறவும். உடனே சாப்பிடுவதாக இருந்தால் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பூவை வதக்கிஅத்துடன் சேர்த்து கிளறலாம். சுவை தூக்கலாக இருக்கும்.

Related posts

பன்னீர் அல்வா

முட்டை இட்லி உப்புமா

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி