ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: சிபிசிஐடி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆஜர்

சென்னை: கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு மாநில பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தனது வழக்கறிஞருடன் ஆஜராகியுள்ளார். நெல்லை பாஜக வேட்பாளர் நாகேந்திரனுக்கு சென்னையில் உள்ள அவரது நிறுவனங்களில் இருந்து தேர்தல் செலவுகளுகாக பலகோடி ரூபாய் கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து தாம்பரம் ரயில் நிலையத்தில் 3 பைகளுடன் இருந்த 3 பேரை போலீசார் மடக்கி விசாரித்த போது அவர்கள் நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் பணி புரியும் சதீஸ், அவரது சகோதரர் நவீன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ஓட்டுநர் பெருமாள் என தெரியவந்தது. மேலும் அவர்கள் நெல்லை பாஜக வேட்பாளருக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என கூறினர்.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நாகேந்திரனின் நெருங்கிய உறவினரும் தொழிலதிபருமான முருகனின் வீட்டிலும் சோதனை நடத்தினர். பின்னர் இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து நாயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் அவரிடன் பணியாற்றக்கூடிய ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது.

இதே போல் கோவையில் வசிக்கும் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் நேரடியாக சென்று விசாரித்தனர். கடந்த ஜுன் மாதம் 5-ம் தேதி தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரடியாக ஆஜராகி இது தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தற்போது தனது வழக்கறிஞருடன் வந்து சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

Related posts

பட்ஜெட்டில் பெயர் அறிவிக்காததால் அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என அர்த்தமல்ல: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை

மருந்துத் துறைகளில் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க ஒன்றிய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது: ஒன்றிய அமைச்சர் ஜேபி.நட்டா

பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சூழ்நிலையை உணர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேட்டி