வழக்குகள் தாமதமாவதை தடுக்க நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: சட்டசபையில் துணை சபாநாயகர் பிச்சாண்டி பேச்சு

சென்னை: சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை சபாநாயகரும், கீழ்பெண்ணாத்தூர் எம்எல்ஏ(திமுக) கு.பிச்சாண்டி பேசுகையில், கீழ்ப்பெண்ணாத்தூரிலே நீதிமன்றம் திறப்பதற்கு ஆவன செய்யப்படுமா? நீதிபதிகள் இல்லாமல் பல வழக்குகள் தாமதமாகிறது. நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆவன செய்யுமா என்றார்.

இதற்கு பதில் அளித்து சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில், நீதிபதிகளினுடைய பணியிடங்களை நிரப்புவதற்கு உயர் நீதிமன்றத்தினுடைய ஆலோசனையின்படி உரிய நடவடிக்கைகள் எடுத்து பல பணியிடங்கள் பூர்த்தி் செய்யப்பட்டுள்ளன. கீழ்பெண்ணாத்தூரிலே எவ்வளவு விரைவில் நீதிமன்றம் கொண்டுவர முடியுமோ, அதைக் கொண்டு வருவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்ளும்” என்றார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்