சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

திருவொற்றியூர்: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமணமாகி கணவனுடன் வசிக்கிறார். 16 வயதுள்ள 2வது மகள் 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு அதற்கு மேல் கல்வியை தொடராமல் வீட்டில் இருந்து வருகிறார்.

இந்த சிறுமி தனது வீட்டின் அருகே வசிக்கும் ஐயப்பன்(22) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கு தெரிந்தது. இதனால், 18 வயது ஆனவுடன் திருமணம் செய்து வைப்பதாககூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு வயிறு பகுதி வீக்கமாக இருந்துள்ளது.

இதனால் சந்தேகப்பட்ட அவரது தாய், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று காண்பித்த போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி ஐயப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்துள்ளனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி