மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்து 14 பேர் பலியான விவகாரத்தில் 12 பேர் மீது சிபிசிஐடி போலீஸ் கொலை வழக்கு பதிவு

சென்னை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடந்த 13-ம் தேதி கள்ளச்சாராயம் அருந்தி முதலில் 3 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது 14 ஆக உயர்ந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அது கள்ளச்சாராயம் இல்லை எனவும், தனியார் ஆலையில் இருந்து மெத்தனால் கடத்திவரப்பட்டு அதில் இருந்து விஷச்சாராயம் தயாரிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.

இது தொடர்பாக மரக்காணம் காவல்துறையினர் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து விஷ சாராயம் குடித்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை முதல்வர் மு.க.ஸ்டலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ்க்கு மாற்றி முதல்வர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் இந்த விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வழக்கின் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆய்வு நடத்தியது. இந்த வழக்கின் ஆவணங்களை மரக்காணம் போலீசார் இன்று காலை சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர். மரக்கணத்தை சேர்ந்த அமரன், ரவி, முத்து, ஆறுமுகம், ரசாயன நிறுவன உரிமையாளர் இளையநம்பி உட்பட 12 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மதன் என்பவர் தவிர 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்