முதல்வர் குறித்து அவதூறு சி.வி.சண்முகம் மீது வழக்கு: அக்.9ம் தேதி ஆஜராக கோர்ட் ஆணை

விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு ெதாடரப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நாட்டார்மங்கலத்தில் கடந்த 7.3.2023ல் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. தமிழ்நாடு அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் வரும் அக்டோபர் 9ம் தேதி நேரில் ஆஜராக சி.வி.சண்முகத்துக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் கடந்த மார்ச் 10ம் தேதி நடந்த அதிமுக நிகழ்ச்சியில் மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று மேலும் ஒரு அவதூறு வழக்கை அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கிலும் அக்டோபர் 9ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்