அனுமதி இன்றி மஞ்சுவிரட்டு 6 பேர் மீது வழக்குப்பதிவு

சிங்கம்புணரி, ஏப்.19: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் பாலக்குறிச்சி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அப்பகுதியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. வயல்வெளிகளில் கட்டுமாடுகளாக பல்வேறு ஊர்களில் இருந்து மாடுகள் கொண்டுவரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது.
இதைத்தொடர்ந்து விஏஓ அப்பாதுரை உலகம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கார்த்திகேயன் நாகராஜன் செல்வம் மாணிக்கம் உள்ளிட்ட ஆறு பேர் மீது அனுமதி இன்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக உலகம்பட்டி எஸ்ஐ மாணிக்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி