கூகுள் மேப்பால் விபத்தில் சிக்கிய கார்கள்

சென்னை: ஈரோடு மாவட்டம், திண்டல் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் மகன் வினோத்(27). இவர் நேற்று கூகுள் மேப் காட்டியபடி ஆத்தூருக்கு செல்வதற்கு சாலையை கடந்துள்ளார். ராசிபுரம் அருகே சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், அணைப்பாளையம் பிரிவு சாலை அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. வாகனத்தை ஓட்டி வந்த வினோத், அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர்.

இதேபோல், சென்னையில் இருந்து விருத்தாசலம் பகுதிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக 5 பேர் காரில் கூகுள் மேப் உதவியுடன் சென்று கொண்டிருந்தனர். மேப் காட்டிய வழியில் சென்றவர்கள் விருத்தாசலம் பொன்னேரி பைபாஸ் நெடுஞ்சாலையில் மணிமுத்தாற்றுக்குள் இறங்கியது. அப்போது கார் செல்ல முடியாமல் மணலில் சிக்கியது. இதையடுத்து டிராக்டர் கொண்டு வந்து கயிறு கட்டி கார் மீட்கப்பட்டது.

 

Related posts

ரூ.4 கோடி முஸ்தபா என்பவரது பணம் இல்லை என்பது உறுதியானது!

திருவெண்ணெய்நல்லூர் அருகே நீர்நிலை வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் இடித்து அகற்றம்

தூத்துக்குடியில் 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு