300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து வியாபாரி பலி

பழநி: திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கழுவம்வலசையை சேர்ந்த செந்தில்குமார் (43). வியாபாரி. தாராபுரம், சேரன் நகரை சேர்ந்தவர் நந்தகுமார் (30). கட்டுமான ஒப்பந்த பணி செய்து வந்தார். இருவரும் நேற்று முன்தினம் காலையில் காரில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சென்று விட்டு மாலையில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

பழநி – கொடைக்கானல் மலைச்சாலையில் 4வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த சுமார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவு முழுவதும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நந்தகுமாரை நேற்று காலை அவ்வழியாக வந்த சுற்றுலாப்பயணிகள் கொடுத்த தகவலின்பேரில் பழநி தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

Related posts

குரங்கம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம்

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்