திருப்பூர் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

திருப்பூர்: ஊத்துக்குளி அருகே நடுரோட்டில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் சித்ரா தேவி, கால்நடை மருத்துவ பேராசிரியர். இவர் ஈரோடு கொடுமுடியில் உள்ள தனது சொந்த ஊருக்கு நேற்று மகன் மற்றும் மகளுடன் காரில் சென்றார். அங்கு உறவினர்களை பார்த்துவிட்டு சரணம்பட்டிக்கு காரில் திரும்பினார். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த செங்கப்பள்ளி அருகே கார் வந்தபோது, காரின் முன்பக்க பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியுள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த சித்ரா தேவி மகன், மகளுடன் காரை விட்டு வெளியேறினர். தொடர்ந்து கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து ஊத்துக்குளி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் அளிக்கப்பட்ட தகவலின்பேரில், போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். மேலும் கார் பேட்டரியில் இருந்து ஏற்பட்ட மின்கசிவால் தீ பிடித்திருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

 

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு