கேரவனில் கேமரா: யார் மீதும் புகார் கொடுக்க விரும்பவில்லை சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் ராதிகா தகவல்

கேரளா: நடிகைகளின் கேரவனில் ரகசிய கேமரா வைத்து படம்பிடித்ததாக நடிகை ராதிகா பேசியிருந்த நிலையில் யார் மீதும் புகார் கொடுக்க விரும்பவில்லை என கேரள சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கமிட்டியின் அறிக்கையை கேரள அரசு கடந்த வாரம் வெளியிட்டது.

அதில், நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும் இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரவனில் பெண்கள் உடைமாற்றுவதை படம் பிடிக்க ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை தான் பார்த்ததாக நடிகை ராதிகா பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில், கேரள அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு தொலைபேசி வாயிலாக நடிகை ராதிகாவிடம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், எந்த படப்பிடிப்பின்போது கேரவனில் கேமரா வைத்த சம்பவம் குறித்து தெரிய வந்தது என ராதிகாவிடம் குழு கேட்டறிந்தது . இதற்கு பதிலளித்த நடிகை ராதிகா யார் மீதும் புகார் கொடுக்க விரும்பவில்லை என்று சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் கருவறையில் விழும் சூரியக்கதிர்கள்: செப்.30ம் தேதி வரை காணலாம்

மார்த்தாண்டம் அருகே போதையில் கடும் ரகளை; மாமனார் வீட்டை சூறையாடிய ராணுவ வீரர்: விவசாயியை தூக்கி நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!