ஆலந்தூர் அருகே நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்: ஐடி ஊழியர் குடும்பத்தினர் தப்பினர்

ஆலந்தூர்: ஆலந்தூர் அருகே நடுரோட்டில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக காரிலிருந்து இறங்கி ஓடியதால் ஐடி ஊழியரின் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அடையாறு எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வினோத் (31). இவர் சிறுசேரியில் உள்ள ஐடி நிறுவனத்தில வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வினோத் தனது காரில் மனைவி, மகன் ஆகியோருடன் தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் இரவு 12 மணிக்கு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

ஆலந்துார் ஜி.எஸ்.டி. சாலை அருகே வந்தபோது காரின் இன்ஜினில் இருந்து கரும்புகை வந்துள்ளது. உடனே காரை நிறுத்திவிட்டு வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் காரைவிட்டு இறங்கி ஓடியுள்ளனர். சிறிது நேரத்தில் கார் முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் தாம்பரம், கிண்டி தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் வினோத் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். நள்ளிரவில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை