இதற்கிடையே கடந்த ஏப்ரல் 3-ந்தேதி இரவு முதல் “கஞ்சா வேட்டை 4.0” அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி குன்றத்தூரில் நடைபெற்ற வாகன சோதனையின் போது ரூ.1 கோடி மதிப்புள்ள 22 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட 7 சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே கஞ்சா பதுக்கி வைப்பவர்கள், விற்பர்கள் குறித்து 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலும் tndgpcontrolroom@mail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் தகவல் தெரிவிக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.