வேட்பாளர்களின் சொத்து பட்டியல்

* ஏ.சி.சண்முகத்துக்கு ரூ.162 கோடி
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜ கூட்டணியில் போட்டியில் ஏ.சி.சண்முகத்தின் சொத்து விவரங்கள்: வேட்பாளரிடம் உள்ள நகை : 2,105 கிராம் தங்கம், 20 கிலோ வெள்ளி, மனைவியிடம் உள்ள நகை: 3,837 கிராம் தங்கம், 1 கிலோ வெள்ளி, வேட்பாளர் கடன் தொகை : ரூ.17,72,48,122, மனைவி கடன் தொகை : ரூ.11,12,21,055, வேட்பாளர் கையிருப்பு தொகை: ரூ.55,601, மனைவி கையிருப்பு தொகை : ரூ.85,480, வேட்பாளர் வங்கி இருப்பு தொகை: ரூ.94,64,043, மனைவி வங்கி இருப்பு தொகை: ரூ.1,17,01,780, வேட்பாளர் முதலீடு செய்த தொகை: ரூ.30,80,30,440, மனைவி முதலீடு செய்த தொகை: ரூ.26,85,27,492, வேட்பாளர் அசையும் சொத்து : ரூ.36,47,81,921, மனைவி அசையும் சொத்து: ரூ.37,40,50,259, வேட்பாளர் அசையா சொத்து : ரூ.7,43,87,417, மனைவி அசையா சொத்து : ரூ.16,02,25,167

* தேவநாதனுக்கு ரூ.400 கோடி
சிவகங்கை தொகுதியில் பாஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் (இமகமுக) வேட்பாளர் தேவநாதன் சொத்து விபரம்: அசையும் சொத்துக்களாக தேவநாதன் பெயரில் ரூ.149 கோடியே 27 லட்சத்து 99ஆயிரமும், இவரது மனைவி மீனாட்சி பெயரில் ரூ.25 கோடியே 17 லட்சத்து 13 ஆயிரமும், மகள் கரிஷ்மா பெயரில் ரூ.39 கோடியே 61 லட்சத்து 14 ஆயிரமும், மகள் ஹரிணி பெயரில் ரூ.39 கோடியே 61 லட்சத்து 68 ஆயிரம் உள்ளன. இதே போல் அசையா சொத்துக்களாக தேவநாதன் பெயரில் ரூ.37 கோடியே 30 லட்சத்து 61 ஆயிரமும், மனைவி மீனாட்சி பெயரில் ரூ.12 கோடியே 93லட்சத்து 64 ஆயிரமும், மகள்கள் இருவர் பெயரிலும் தலா ரூ.50லட்சம் உள்ளன. இவரது அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு மொத்தம் ரூ.304 கோடியே 17 லட்சத்து 33ஆயிரம் ஆகும். மேலும் வங்கியில் தேவநாதன் பெயரில் ரூ.91 கோடியே 48 லட்சத்து 23 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ.6 கோடியே 82லட்சத்து 66 ஆயிரமும் கடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* எல்.முருகனுக்கு ரூ.4.26 கோடி
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல் முருகனின் சொத்து மதிப்பு விவரம்: ரொக்க பணம் ரூ.50,000 வைத்துள்ளதாகவும், அவரது மனைவி கலையரசியிடம் ரூ.72,000, மகன் தரணிஷ் கையில் இருப்பு ரூ.5,000 உள்ளதாக காண்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள கனரா வங்கியில் ரூ.61,694 முருகன் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.22,44,829 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவி கலையரசி பெயரில் சென்னையில் உள்ள கீழ்பாக்கம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையில் ரூ.7,98,515 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை இந்தியன் வங்கியில் ரூ.11,516 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. எல்ஐசி மற்றும் தனியார் நிறுவனங்களில் ரூ.60,38,846 காப்பீடு செய்துள்ளார். அவரது மனைவி கலையரசி பெயரில் எல்ஐசி மற்றும் தனியார் நிறுவனங்களில் ரூ.46 லட்சத்து 35 ஆயிரம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. முருகன் பெயரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஒரு மாருதி சுசுகி ஸ்விப்ட் கார் உள்ளது. அவரது மனைவி பெயரில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உள்ளது. முருகன் பெயரில் ரூ. 11 லட்சம் மதிப்பிலான 240 கிராம் தங்க நகைகள் உள்ளது. அவரது மனைவி பெயரில் ரூ.33 லட்சம் மதிப்பிலான 720 கிராம் தங்க நகைகள் உள்ளன.

மொத்தம் முருகன் பெயரில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 95 ஆயிரத்து 369 மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்து உள்ளது. அவரது மனைவி பெயரில் ரூ.88 லட்சத்து 57 ஆயிரத்து 31 மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளன. எல்.முருகன் பெயரில் ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. அவரது மனைவி பெயரில் ரூ.1 கோடியே 65 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. டெல்லியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.20 லட்சம் கடன் பெற்றுள்ளார். அவரது மனைவி பெயரில் சென்னையில் உள்ள அண்ணாநகர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையில் ரூ.90 லட்சம் கடனும் மற்றொரு வங்கியில் 10 லட்சம் என ஒரு கோடி கடன் உள்ளது.

* ராம.ஸ்ரீனிவாசனுக்கு ரூ.2.5 கோடி
மதுரை பாஜ வேட்பாளர் ராம.ஸ்ரீனிவாசன் சொத்து விபரம் பின்வருமாறு: இவரது 2022-23ம் ஆண்டு வருமானம் ரூ.13,27,350, கையிருப்பு ரூ.5,50,000, வங்கி கணக்கில் பீபீ குளம் இந்தியன் வங்கியில் ரூ.18,12,726.80, தஞ்சாவூர் சாஸ்திரா கிளை சிட்டி யூனியன் வங்கியில் ரூ.6,85,513, பவர் பைனான்ஸில் ரூ.49 லட்சம், தஞ்சை சாஸ்திரா கிளை சிட்டி யூனியன் வங்கியில் நிரந்தர டெபாசிட் ரூ.5 லட்சம், பீபீகுளம் இந்தியன் வங்கியில் தேர்தல் கணக்கிற்காக ரூ.50 ஆயிரம் உள்ளது. பஜாஜ் இன்சூரன்சில் ரூ.9,76,911, எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டில் ரூ.2,189.92ம் உள்ளது. ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் நகைகள் உள்ளன. மொத்தமாக ராம.ஸ்ரீனிவாசனுக்கு ரூ.99,62,340.72 மதிப்பிலான பணம் மற்றும் நகைகளும் உள்ளன. திண்டுக்கல் மாவட்டம் ஆலமரத்துபட்டியில் 2 ஏக்கர் 65 சென்ட் நிலம் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

வேளாண்மை அல்லாத பிற வகை நிலங்களாக மதுரை நாகனாகுளத்தில் 3200 சதுர அடியில் பிளாட்கள், கொடிக்குளம் கிராமத்தில் 3005 சதுர அடி, முத்தமிழ் நகரில் 1950 சதுர அடி, உலகனேரியில் 2840 சதுர அடியில் நிலம் உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.22,75,000 ஆகும். மனைவி திலகாஸ்ரீ ஆண்டு வருமானம் ரூ.19,22,520, கையிருப்பு ரூ.4,50,000, தல்லாகுளம் ஸ்டேட் வங்கியில் இருப்பு ரூ.2,66,362, தல்லாகுளம் ஸ்டேட் வங்கியில் நிரந்தர டெபாசிட் ரூ.40 லட்சமும் உள்ளது. பஜாஜ் இன்சூரன்சில் ரூ.14,94,514, எஸ்பிஐ இன்சூரன்சில் ரூ.1,01,613, மற்றொரு பாலிசியில் ரூ.96,800ம் உள்ளது. ரூ.36 லட்சம் மதிப்புள்ள 72 பவுன் நகை உள்ளது. இவருக்கு மொத்தத்தில் ரூ.1,47,84,958 மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் உள்ளன. திருப்பாலையில் 3,111 சதுரஅடியில் ரூ.80 லட்சம் மதிப்பிலான குடியிருப்பு கட்டிடம் உள்ளது.

Related posts

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!

MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்