வேட்பாளர் மாலை அணிவித்தபோது திருப்பூர் குமரன் சிலைக்கு திருநீறு பூசிய பாஜவினர்

*போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

திருப்பூர் : பாஜ வேட்பாளர் ஏ.பி. முருகானந்தத்துடன் வந்த பாஜவினர் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்தபோது, சிலைக்கு திருநீறு பூசியதால் பரபரப்பும் ஏற்பட்டது.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜ சார்பில் ஏ.பி. முருகானந்தம் போட்டியிடுகிறார். நேற்று காலை மாநகரில் உள்ள கோயில்களுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டார்.

முன்னதாக திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வர முடிவு செய்தனர்.அதன்படி குமரன் சிலைக்கு மாலை அணிவித்தபோது, பாஜ நிர்வாகிகள் குமரன் சிலைக்கு திருநீறு பூசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் அங்கிருந்து வேட்பாளர் முருகானந்தம் சட்டையில்லாமல் உள் பனியன் மட்டுமே அணிந்தபடி திறந்த வாகனத்தில் ஊர்வலமாக வந்தார். அப்போது கையில் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவிக்கும் விதமாக நூல் பண்டல்கள் மற்றும் ஜமக்காளம் போன்றவற்றுடன் வந்தார். இதன்பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார்.

வேட்பாளர் மற்றும் அவருடன் 4 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பாஜவினர் பலரும் உள்ளே நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜவினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் நிர்ணயிக்கப்பட்டவர்களைவிட அதிகமாக இருந்தவர்களை போலீசார் வெளியே அழைத்து சென்றனர்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?