செங்கல்பட்டு, தூத்துக்குடி கலெக்டர்கள் மாற்றம் ரத்து 7 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்களின் பணி மாறுதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது 7 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழ்நாடு பைபர் நெட் கழக நிர்வாக இயக்குநர் கமல் கிஷோர், மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே செங்கல்பட்டு கலெக்டராக மாற்றப்பட்டிருந்தார். அந்த உத்தரவு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார். செங்கல்பட்டு கலெக்டராக இருந்த ராகுல்நாத், ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டிருந்தார். தற்போது அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, செங்கல்பட்டு கலெக்டராக தொடர்ந்து நீடிப்பார்.

அதேபோல, தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், ஏற்கனவே கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக மாற்றப்பட்டிருந்தார். அந்த உத்தரவு தற்போது ரத்து செய்யப்பட்டு, தூத்துக்குடி கலெக்டராக தொடர்ந்து நீடிப்பார். திருப்பூர் கலெக்டர் வினித், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநராக மாற்றப்பட்டிருந்தார். தற்போது அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, ஆவின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், தொல்லியல்துறை ஆணையர் பதவியை கூடுதலாக கவனிப்பார். அதேநேரத்தில் அவர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளர் பதவியை, தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூடுதலாக கவனிப்பார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!

ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்.! பிரிட்டனின் புதிய பிரதமராக வெற்றி பெற்றுள்ள கீர் ஸ்டார்மர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் அமல்