குத்தகை ரத்து: ரேஸ் கிளப் நிர்வாகம் ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தாக்கல்

சென்னை: 160 ஏக்கர் நில குத்தகை ரத்து செய்ததை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. கிண்டியில் 160 ஏக்கர் நிலத்திற்கான குத்தகை பாக்கி ரூ.731 கோடி செலுத்தாததால் குத்தகையை அரசு ரத்து செய்தது. செப்டம்பர். 6இல் குத்தகையை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக ரேஸ் கிளப் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. செப்டம்பர் .24-ல் நிலம் ஒப்படைக்க கடைசி நாள் என்பதால், வழக்கில் பதில் தர அவகாசம் தருவதில் இருந்து விலக்கு தேவை என ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதம் வைத்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் உரிமையியல் வழக்கை விசாரிக்கக்கோரும் மனு மீது செப்டம்பர் . 23-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Related posts

கார்- பைக் மோதியதில் பாட்டி, கணவன் பலி: கர்ப்பிணி மனைவி கிணற்றில் குதித்தார்

50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

பதிவுத் துறையில் 15 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்