இந்திய வம்சாவளி கனடா எம்பிக்கு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மிரட்டல்

ஒட்டாவா: கனடாவில் வசிக்கும் இந்து மக்களுக்கு எதிராக காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அங்குள்ள இந்து கோயில்கள் தாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் எட்மண்டனில் உள்ள இந்துக் கோயில் இடிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்பி சந்திரா ஆர்யாவுக்கு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சந்திரா ஆர்யா தனது எக்ஸ் பதிவில், கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்து கோவில் இடிபாடுகள் மற்றும் பிற வெறுப்பு மற்றும் வன்முறைச் செயல்களைக் கண்டித்தார்.

அவரது பதிவில்,’நாங்கள் இந்துக்கள். உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் எங்கள் அற்புதமான நாடான கனடாவுக்கு வந்துள்ளோம். தெற்காசியாவில் உள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும், ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் இருந்தும், உலகின் பல பகுதிகளிலிருந்தும், நாங்கள் இங்கு வந்துள்ளோம், கனடா எங்கள் நிலம்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்தநிலையில் அவருக்கு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்