ராயல் என்பீல்டு நிறுவனம், சூப்பர் மெட்டியோர் 650 மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்திருந்தது. தற்போது இதனை அமெரிக்கா மற்றும் கனடாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்திய மதிப்பின்படி, துவக்க விலையாக சுமார் ரூ.5.81 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.6.23 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று வேரியண்ட்கள் உள்ன.
இதில் 648 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 46.3 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடியது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. எல்இடி ஹெட்லாம்ப், யுஎஸ்பி போர்ட், புளூடூத் இணைப்பு, நேவிகேஷன் வசதி உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன.