கனடாவில் 2 முறை நிலநடுக்கம்

வான்கூவர்: கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தில் வடக்கு கடற்கரை பகுதிகளில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 3.20மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது வான்கூவருக்கு வடக்கே சுமார் 1.720கி.மீ தொலைவில் ஹைடா குவாய் என்ற தீவுப் பகுதியில் சுமார் 33கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது. இதனையடுத்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து 4.5ரிக்டர் அளவில் மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை