கனடாவில் வசிக்கும் கோல்டி பிரார் தீவிரவாதி: இந்தியா அறிவிப்பு

புதுடெல்லி: கனடாவில் வசிக்கும் ரவுடி கும்பலின் தலைவனான கோல்டி பிராரை தீவிரவாதியாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2017ல் மாணவர் விசாவில் கனடாவுக்கு சென்ற சத்விந்தர் சிங் அல்லது சத்விந்தர்ஜித் சிங் என்ற கோல்டி பிரார் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோவின் நெருங்கிய கூட்டாளி ஆவார். ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு அதிநவீன ஆயுதங்கள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை கோல்டி பிரார் சட்ட விரோதமாக கடத்தியுள்ளார். அதே போல் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாபர் கல்சா அமைப்புடன் அவர் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். எனவே, சட்ட விரோத தடுப்பு சட்டத்தின்படி கோல்டி பிரார் தீவிரவாதியாக அறிவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளது.

Related posts

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் புனித யாத்திரை திட்டம்: டெல்டாவில் 8 கோயில்கள் தேர்வு

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது