பிரசாரம் ஓய்ந்தது

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களை கைப்பற்றிய திமுக தலைமையிலான கூட்டணி, புதிய உத்வேகத்துடன் இடைத்தேர்தலை சந்திக்கிறது. மக்களுக்கான திட்டங்களை தீட்டி மக்களுக்கான அரசாக செயல்படுவதால் அதிமுக, தேமுதிக இடைத்தேர்தலை புறக்கணித்தது. பாஜ கூட்டணி பாமக, நாதக உள்பட 29 பேர் களத்தில் உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

இதை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது. பெட்ரோல், ஆவின் பால் விலை குறைப்பு, காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமை பெண் திட்டம் இப்படி பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். நாட்டில் நடைபெறும் பிரசவங்களில், மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக்கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம். அதாவது 99 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன என தேசிய ஆய்வு அறிக்கை கூறியுள்ளது. ஜவுளித்துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம், ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், எலக்ட்ரானிக் துறை மின்னணு பொருட்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

இப்படி ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகளே தமிழ்நாடு பெரும்பாலான முக்கிய துறைகளில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்துகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய இடங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் வாயிலாக மொத்தம் 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ஏறத்தாழ 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் நடைபெற்று இதுவரை தொழில் வளர்ச்சி வரலாற்றில் இல்லாத ஒரு மாபெரும் புரட்சி நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆட்சி பொறுப்பேற்ற பின், 45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இவைகள் அல்லாமல், கடந்த 3 ஆண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நிறைவேற்றியுள்ள திட்டங்கள், படைத்துள்ள சாதனைகள் எண்ணிலடங்காதவை. தலைசிறந்த மூன்றாண்டு, தலைநிமிர்ந்த தமிழ்நாடு என முதல்வர் ஸ்டாலின் வர்ணித்துள்ளார். இது எனது அரசு அல்ல, நமது அரசு. அந்த வகையில், நாடும் மாநிலமும் பயன் பெற உழைப்பேன் என உறுதியேற்று ஆட்சி பயணத்தை உங்கள் வாழ்த்தோடு தொடர்வேன்.

மேலும், ‘இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி’ என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இச்சாதனைகள், திமுக வேட்பாளர் வெற்றியை உறுதி செய்யும் என வாக்காளர்கள் கூறுகின்றனர். இதுபோன்று பாஜ கூட்டணி தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. தொடர்ந்து வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வடக்கு மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் தலைமையில் டிஐஜி, எஸ்பிக்கள் உள்பட 1,500 போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் யார் வெற்றி என்பது உறுதி செய்யப்படும்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு