23ம் தேதி வாக்குப்பதிவு நடப்பதால் ராஜஸ்தானில் நாளை பிரசாரம் ஓய்கிறது: தலைவர்கள் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 23ம் தேதி தேர்தல் நடைபெறுவதால், நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதனால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் மொத்தமுள்ள 200 ெதாகுதிகளில் ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 5.2 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 1,857 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதே 2018ல் 2,188 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், தற்போது 1,857 வேட்பாளர்களாக குறைந்துள்ளது. தற்போது போட்டியிட்டுள்ள வேட்பாளர்களில் 11 வேட்பாளர்கள் எவ்வித படிப்பும் படிக்காதவர்களாக உள்ளனர். பத்தாம் வகுப்பு படித்தவர்கள் 258 பேரும், தொழில்முறை பட்டதாரிகள் 323 பேரும், பட்டதாரிகள் 235 பேரும், முதுகலை பட்டதாரிகள் 316 பேரும் போட்டியில் உள்ளனர்.

இந்நிலையில் கடைசி நேர தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைந்த நிலையில், நாளை (நவ. 21) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதனால் தேர்தல் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ெசய்து வருகின்றனர். வேட்பாளர்களும் அவரவர் தொகுதியில் வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி ரொக்கம், ஆபரணங்கள், ேபாதைப் பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் ரூ.644 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜெய்ப்பூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.106 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலோடு ஒப்பிடுகையில், 920% அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் உள்ள எந்த பள்ளிகளும் முன்மாதிரி பள்ளிகளாக மாறவில்லை: பிரதமர் மோடியை மாணவர் சமுதாயம் மன்னிக்காது என செல்வப்பெருந்தகை ஆவேசம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் – மம்தா பானர்ஜி அறிவிப்பு

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் கிண்ணம் கண்டெடுப்பு