சாதி, மத உணர்வுகள் புண்படும்படி பிரசாரம் செய்ய கூடாது: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

புதுடெல்லி: சாதி, மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பரப்புரைகளில் ஈடுபட கூடாது, தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘சாதி மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடக் கூடாது.

சாதி மத அடிப்படையிலான வாக்கு சேகரிப்பில்ஈடுபடக் கூடாது. பொதுக் கூட்டங்களில் பேசும்போது நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சித் தலைவர்கள் பொய்யான அடிப்படை ஆதாரங்கள் இல்லாத வாக்காளர்களை திசை திருப்பக் கூடிய தகவல்களை பொது வெளியில் தெரிவிக்க கூடாது. எந்த ஒரு நபர் குறித்த தனிப்பட்ட வாழ்க்கையையும், அவர்களது பொது வாழ்வுக்கு தொடர்பில்லாத விஷயங்களையும் எந்த ஒரு கட்சித் தலைவரும் அல்லது நிர்வாகிகளும் விமர்சிக்க கூடாது.

கோயில்கள் மசூதிகள், தேவாலயங்கள் குருதுவாராக்கள் அல்லது வழிபடக்கூடிய எந்த ஒரு இடத்திலும் தேர்தல் கண்ணோட்டத்தில் பரப்புரைகளை மேற்கொள்ளக் கூடாது. அதேபோன்று உறுதிப்படுத்தப்படாத தகவல்களை கொண்ட எந்த ஒரு விளம்பரங்களையும் ஊடகங்களுக்கு கொடுக்கக் கூடாது. குறிப்பாக பெண்களை கண்ணிய குறைவாக நடத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது. சமூக வலைதளங்களில் மோசமான, தரம் தாழ்ந்த செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவருக்கு அரிவாள் வெட்டு

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து