கலிஃபோர்னியா மாகாணத்தில் தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீ: எல்டராடோ விமான நிலையத்துக்கும் பரவியதால் பதற்றம்

கலிஃபோர்னியா: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தீவிரமாக எரிந்துவரும் காட்டுத்தீ எல்டராடோ விமான நிலையத்திற்கும் பரவி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டு தீ பலத்த காற்று காரணமாக அதிவேகமாக பரவி வருகிறது. ஏராளமான வனப்பகுதிகளை சாம்பலாக்கி விட்ட காட்டு தீ எல்டராடோ மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்கும் பரவியது.

இதனால் விமான நிலையமே கரும்புகை மற்றும் தீ பிழம்புகளால் சூழப்பட்டுள்ளது. இதை அப்பிடுது காட்டு தீ பரவலை தடுத்து நிறுத்த தீயணைப்பு படையினர் எலிக்காப்டர்கள் மற்றும் விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. விமான நிலையத்தில் ஏராளமான சிறிய வகை விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் தீ பரவாமல் தடுத்து நிறுத்தும் பணிகளில் மாகாண தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தின் வெளிப்புற பகுதிகளை தீ சூழ்ந்துள்ளதை அடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்