கேர்ன்ஹில் நர்சரியில் சோலை மரக்கன்றுகள் உற்பத்தி தீவிரம்

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள கேர்ன்ஹில் வனப்பகுதியில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு வரையாடுகள், சிறுத்தை, குரங்குகளின் பதப்படுத்தப்பட்ட உருவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்க கூடிய பழங்குடியின மக்களின் வரலாறு குறித்த புகைப்படங்கள், நவீன நீலகிரியின் உருவான வரலாறு போன்ற தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பறவைகள், வன விலங்குகளின் ஒலிகள் அடங்கிய தொகுப்பும் உள்ளது.

இங்குள்ள வனத்தில் சிறுத்தை, மான், காட்டுமாடு, அணில், புலி உள்ளிட்ட வன விலங்குகளின் மாதிரி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வனத்திற்கு நடுவே சுற்றுலா பயணிகள் நடைபயணம் மேற்கொள்ளும் வசதியும் உள்ளது. நடைபயணமாக சென்று வனத்தின் நடுவே உள்ள காட்சி கோபுரத்தில் இருந்து இயற்கை காட்சிகளை பார்வையிடலாம். சிறப்பம்சமாக மரங்களுக்கு நடுவே தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் ஏறி நடந்து சென்று பார்த்து மகிழ்வது வழக்கம். கேர்ன்ஹில் வனத்தில் உள்ள தொங்கு பாலம் மற்றும் வன விலங்குகளின் மாதிரிகளை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

வனத்துறையால் நடத்தப்படும் இரு தங்கும் விடுதிகள் உள்ளன. இப்பகுதி சூழல் மேம்பாட்டு குழு மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள நர்சரியில் நாவல், விக்கி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை சுற்றுசூழல் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் நடவு ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் நடவு செய்ய பயன்படுத்தப்படுகின்றன. தற்போது மழை காலங்களில் துவங்கியுள்ள நிலையில் மரக்கன்றுகள் உற்பத்தி துவக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் பணிகளில் சூழல் மேம்பாட்டு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு!

உணவு தேடி வந்த இடத்தில் தென்னையை சாய்த்த யானை மின்சாரம் பாய்ந்து பலி

இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் வான்வழி சாக நிகழ்ச்சி ஒத்திகை: இன்று முதல் தொடக்கம்