கேபினட் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில் கர்நாடகாவை ஏன் கேட்க வேண்டும் ? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: பெண்ணையாறு தொடர்பான விவகாரத்தில் தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹெச்.ராய் மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘ பெண்ணையாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டும் தனி தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? என நீதிபதிகள் கேட்டனர். ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி அளித்த பதிலில்,‘‘ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு மூலம் கர்நாடகாவுடன் இருமுறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்தவித சமரசமோ அல்லது முன்னேற்றமோ ஏற்படவில்லை. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக புதிய குழுவை உருவாக்கி பேச்சு வார்த்தை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார். கர்நாடகா அரசும் இதே கோரிக்கையை முன்வைத்தது.

ஆனால் அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘ தீர்ப்பாயம் அமைக்காதது ஏன் என்பது மட்டும் தான் எங்களது கேள்வி. குறிப்பாக ஒன்றிய கேபினட் முடிவெடுக்க வேண்டிய இந்த விவகாரத்தில் கர்நாடகா அரசிடம் ஒன்றிய அரசு ஏன் கேட்க வேண்டும் என கூறுவது ஏன் என்று தெரிவியவில்லை என காட்டமாக தெரிவித்தனர். ஒன்றிய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உமாபதி மற்றும் குமணன் ஆகியோர்,‘‘ நீர் பங்கீடு விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண முடியாவிட்டால் ஒரு வருடத்தில் தீர்ப்ப்பாயம் அமைக்க வேண்டும் எனக் கூறினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘‘ பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரத்தில் புதிய பேச்சுவார்த்தை குழுவை உருவாக்க வேண்டும். அந்த குழு தனது அறிக்கையை அடுத்த மூன்று மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Related posts

21ம் நூற்றாண்டின் வரலாற்றில் இந்தியாவின் சோலார் புரட்சி பொன் எழுத்தால் எழுதப்படும்: பிரதமர் மோடி பெருமிதம்

அரசியலமைப்பு சட்டத்தின்படி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தற்போது சாத்தியமில்லை: ப.சிதம்பரம் கருத்து

கெஜ்ரிவால் இன்று ராஜினாமா? மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார்