சிஏஏ சட்டம் மக்களுக்கு முரணானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கும்: ப.சிதம்பரம் திட்டவட்டம்

திருப்புத்தூர்: குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கு முரணானது என்று உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கும் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்க சிவகங்ைக மாவட்டம், திருப்புத்தூர் பெரிய பள்ளிவாசல் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வந்தார்.

அங்கு அவர் பேசுகையில், ‘‘நாட்டில் ஒருபோதும் அரசியல் சாசனம் திருத்தப்படாது. பொது சிவில் சட்டம் ஏற்றுக் கொள்ளப்படாது. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சட்டம் மக்களுக்கு முரணானது என உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கும். ஊரகப்பகுதியான நமது தொகுதியில் சட்டம், வேளாண்மை, மருத்துவம் ஆகிய மூன்றிற்கும் கல்லூரி அமையப்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது விரைவில் கால்நடைக் கல்லூரியும் அமைக்கப்படும்’’ என்றார்.

Related posts

கர்நாடகாவில் நிலச்சரிவு: 3 டேங்கர் லாரிகள் சிக்கின

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய குறைந்த அளவு நீர் கூட கிடைக்கவில்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை