பைஜூஸ் அதிபர் சொத்து மதிப்பு பூஜ்யமாக சரிவு: ஃபோர்ப்ஸ் அறிக்கை வெளியீடு

பெங்களூரு: ஆன்லைன் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமான பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு பூஜ்யமாக சரிந்தது. ஓராண்டுக்கு முன் ரூ.17,545 கோடியாக இருந்த பைஜூஸ் ரவீந்திரனின் சொத்து மதிப்பு தற்போது பூஜ்யமாகிவிட்டது. பைஜூஸ் நிறுவனரின் சொத்து மதிப்பை ஆராய்ந்த ஃபோர்ப்ஸ் நிறுவனம் அவரது சொத்து பூஜ்யமாகிவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2022-ம் ஆண்டில் ரூ.1,83,597 கோடியாக இருந்த பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு தற்போது ரூ.8,345 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. பல கோடி ரூபாயை முதலீடு செய்துள்ள பிளாக்காக் நிறுவனம்தான் பைஜூஸ் மதிப்பு ரூ.8,345 கோடி என மதிப்பிட்டுள்ளது. 2011-ல் தொடங்கப்பட்ட ஆன்லைன் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமான பைஜூஸ் மிகவேகமாக வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்