வலைகளை வெட்டி வீசி மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அன்று மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், படகுகளை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை செய்து மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் மீனவர்களின் படகில் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசினர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் உடனடியாக படகுகளை வேறு பகுதிகளுக்கு ஓட்டிச் சென்று இரவு முழுவதும் மீன் பிடித்து விட்டு குறைந்த மீன்களுடன் நேற்று காலை கரை திரும்பினர்.

Related posts

வடகிழக்கு பருவமழை எதிரொலி : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 36 படகுகளை வாங்கிய சென்னை மாநகராட்சி!!

மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் நடிகர் ரஜினிகாந்த்

வானில் நெருப்பு வளையம்.. தென் அமெரிக்க நாடுகளில் தெரிந்த ‘ரிங் ஆஃப் ஃபயர்’: ரசித்து மகிழ்ந்த மக்கள்!