வாங்க வீட்டை அலங்கரிக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

வீடு அழகாக இருக்க வேண்டும் என்பதில் நமக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது. ஆனால் அதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்? அதற்காக என்னென்ன செய்ய வேண்டும்?

* தரை விாிப்புகளை வாங்கும் போது சிறிய விரிப்புகளைத் தவிர்க்க வேண்டும். அறையின் நடுப் பகுதியில் பெரிய தரை விரிப்பை விரித்தால்தான் பார்க்க அழகாக இருக்கும்.

* வீட்டிற்கு வண்ணம் அடிப்பதற்கு முன்பாக, வீட்டிற்கான பர்னிச்சர்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை வாங்குவது நல்லது. பின் அந்த அலங்காரப் பொருட்களுக்குப் பொருத்தமான வண்ணங்களைத் தேர்வு செய்ய எளிதாக இருக்கும்.

* திரைச் சீலைகளுக்கு அடியில் இருந்து வெளிச்சம் வந்தால் அது பார்க்க அழகாக இருக்காது. எப்போதும் தரை வரை தொடும் நீண்ட உயரமான திரைச் சீலைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அது வீட்டின் உயரத்தை அதிகாித்துக் காட்டும்.

* ஒரு சோபாவில் ஏராளமான தலையணைகள் இருக்கலாம், அதே நேரத்தில் அதில் உட்காருவதற்கு இடமும் இருக்கலாம். நீளமாக இருக்கும் சோபாவில் 4 பொிய தலையணைகளை வைக்கக்கூடாது. உட்காருவதற்கு வசதியான இடம் இருக்கும் வகையில் தலையணைகள் மற்றும் மெத்தைகளை அமைக்க வேண்டும்.

* கடைகளில் பெரிய மெத்தைகள் அல்லது பெரிய தலையணைகளைப் பார்க்கும் போது, பார்க்க அழகாகத் தெரியும். ஆனால் அவற்றை நமது வீட்டில் உள்ள பர்னிச்சர்களில் வைத்தால், நாம் எதிர்பார்க்கும் அழகு கிடைக்காது. பர்னிச்சர்களுக்கு சிறிய தலையணைகளையே தேர்வு செய்யலாம்.

* சரவிளக்குகளை மிக உயரத்தில் தொங்க விடக்கூடாது. காரணம், உயரத்தில் தொங்கும் போது, அதன் வெளிச்சம் வீட்டின் மேற்கூரையின் மீது மட்டுமே படும்.

* சிலர் தங்களின் அறையினை ஒரு தீமில் வடிவமைத்திருப்பார்கள். அது நாளடைவில் சலிப்பை ஏற்படுத்தும். எளிதாக நீக்க முடியாத அச்சுகள் மற்றும் வரைபடங்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

* பர்னிச்சர்கள் புதிய நவீன பாணியில் இருக்கிறது என்பதற்காக அதை தேர்வு செய்யாமல், வசதியாகவும், பொருத்தமாகவும் இருக்கும் படி தேர்வு செய்யலாம்.

* பல வகையான மின் விளக்குகளைத் தேர்வு செய்யாமல், ஒன்று அல்லது இரண்டு வகை மின் விளக்குகளைத் தேர்ந்தெடுத்து, வீட்டின் பல்வேறு பகுதிகளில் பொருத்தலாம்.மேற்கண்டவைகளை செய்து பாருங்கள் உங்கள் வீடும் ஜொலிக்கும்.

– பா.பரத், சிதம்பரம்.

Related posts

சருமத்தைப் பாதுகாக்கும் வால்நட் எண்ணெய்!

பாராலிம்பிக்ஸில் பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீராங்கனைகள்!

ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!