சாப்பிட வாங்க… கேம் விளையாடுங்க!

எல்லோரும் கிட்ஸ் ஆகலாம்

உணவகத்திற்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் உணவின் ருசிக்காக மட்டுமில்லாமல் புதிய அனுபவத்திற்காகவும் வருகிறார்கள். இதனால் வளர்ந்த பெருநகரங்களில் விளையாட்டுகளுடன் கூடிய உணவகம், லேக் வீயு ரெஸ்டாரன்ட், ரூப் டாப் ரெஸ்டாரன்ட், பேய்கள் நடமாடுவது போன்ற இன்ட்ரஸ்டிங்கான பல தரப்பட்ட ரெஸ்டாரன்ட்களை ஆரம்பித்து சக்சஸ்ஃபுல்லாக நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் சென்னை எக்மோர் ரெட் க்ராஸ் ரோட்டில் அமைந்துள்ள கேமிஸ்ட்ரி என்டெர்டையின்மென்ட் போர்டு கேம் கேஃபே உணவகத்தில் சுவையான உணவு தருவது மட்டுமில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி விளையாடும் போர்டு கேமுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த உணவகத்தை விஜயகுமார், சிவா, சரண்யா, பிரேம் ஆகிய நால்வர்தான் நடத்தி வருகிறார்கள். நாம் உணவத்திற்குள் நுழைந்ததும் ஒவ்வொரு டேபிளிலும் ஜென், பூமர், 90’ஸ் கிட்ஸ் என எல்லா ஜெனரேசன் குழந்தைகளும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களிடம் நாம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தபோதே உணவகத்தின் உரிமையாளர்கள் நம்மிடம் இன்முகத்துடன் வந்து பேசத்துவங்கினர். “எங்களுக்கு உணவகம் துவங்க வேண்டும் என்பதுதான் ஆசை.

ஒரு சாதாரண உணவகமாக மட்டும் இல்லாமல் இதை நாங்கள் வெளிநாட்டுத் தரத்தில் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதற்கு உணவுகள் மட்டும் வெளிநாட்டு ஸ்டைலில் இருந்தால் போதுமா? என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்தது. சரி அதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என புதுப்புது ஐடியாவையும் யோசித்தோம். அப்படி தோன்றியது தான் கேம் வித் ஃபுட் ஐடியா. முன்பெல்லாம் விடுமுறை நாட்களில் குழந்தைகள் செஸ், கேரம் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடுவதைப் பார்த்திருப்போம். இன்றைக்கு வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் மொபைல் போன்களிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். உண்மையிலேயே போர்டு கேம் ஒரு ரிலாக்ஸ் கேம் மட்டுமில்லாமல் பிரைனுக்கும் ஒரு நல்ல வேலையை, ஆரோக்கியமான சிந்திப்புத் திறனைக் கொடுக்கிறது.இங்கு இருப்பது அனைத்துமே டேபிள் கேம்கள்தான். சாப்பிட வருபவர்கள் உணவு ஆர்டர் செய்த பின்னர் விளையாடத் தொடங்குவார்கள். அவர்கள் ஆர்டர் செய்த உணவு வருவதற்கு முன்பு ஒரு கேமை எப்படி விளையாடுவது? அதன் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் என்ன? என்பதைச் சொல்லிக் கொடுக்க ஒரு ட்யூட்டர் இருப்பார். ஒவ்வொரு கேமினையும் விளையாடுபவர்கள் புரிந்து, கேமை ஸ்டார்ட் செய்து விளையாடுவது வரை அவர் அங்கேயே இருப்பார்.

வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த ஃபுட் வந்த பிறகே ட்யூட்டர் அங்கிருந்து விலகிச் செல்வார். இதற்கிடையில் வீரர்களுக்கு விளையாட்டில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் உடனடியாக இன்முகத்துடன் வந்து டவுட்டையும் கிளீயர் செய்து சென்றுவிடுவார்கள். ஒவ்வொரு போர்டு கஷ்டமர்சும் டிராமிசு மில்க் ஷேக்குடன் தங்களது விளையாட்டைத் துவங்குவார்கள். அது எங்களது சிக்னேச்சர் டிஷ் என்பதால் மட்டும் கிடையாது. அதில் இருக்கும் ருசிதான் அவர்களை டிராமிசு மில்க் ஷேக்குடன் தங்களது கேமினை விளையாடத் தொடங்க வைக்கிறது. இதிலிருந்து கேம் போய்க் கொண்டிருக்கும்போதே அவர்கள் அடுத்தடுத்த டிஷ்ஷை ஆர்டர் செய்யத் தொடங்கிவிடுவார்கள். பனீர் ரெட் பர்பிக்கா கார்லிக் ப்ரட் பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் சாப்பிடுவதற்கும் தரமாக இருக்கும். பெரும்பாலும் உணவகத்திற்கு செல்பவர்கள் உணவினை மெயின் கோர்சை சாப்பிடத் தொடங்குவதற்கு முன்பு ப்ரன்ச் ஃப்ரையை ஆர்டர் செய்து சாப்பிடத் தொடங்குவார்கள். இந்த ப்ரெஞ்ச் ஃப்ரையை நாங்கள் சாதாரணமாக கொடுக்காமல் அதை பெர்ரி பெர்ரி ப்ரைஸ்ஸாக கொடுக்கிறோம்.

நைன்டீஸ் கிட்ஸ் வீட்டில் தாயம் விளையாடும்போது எப்படி அம்மா மாலை நேரத்தில் பஜ்ஜி, உளுந்து வடை, பக்கோடா செய்து கொடுப்பார்கள். அது போலத்தான் இந்த 2கே காலகட்டத்தில் ஃபுட்டில் ப்ரைஸ், மேக் சீஸ் பால், டிரியோ மாயா, பனீர் ஸ்டீக் கார்டன் என்று மாறிவிட்டது. மேக் சீஸ் பால் எங்கள் உணவகத்தின் இன்னுமொரு ஸ்பெஷல் டிஷ். கோல்டன் கலரில் பந்து போல இருக்கும் இந்த டிஷ்ஷை ஜென் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஹசேல்நட்டெல்லா ஹாட் சாக்லேட்டும் எங்களின் யுனிக் டிஷ்ஷில் ஒன்று. உணவகத்திற்கு வரும் பல வாடிக்கையாளர்களின் பெஸ்ட் சாய்ஸாக இருப்பது சோயா 65 தான். பெரும்பாலான வீடுகளில் சோயாவை சமைக்கும்போது அதில் ஒரு மாதிரி பச்சை வாடை அடித்துக்கொண்டே இருக்கும். அதற்கு முக்கியக் காரணம் சோயாவை முறைப்படி சுத்தம் செய்யாததுதான். சரியான முறையில் சோயாவை சுத்தம் செய்து அதோடு உரிய மசாலாவைச் சேர்த்து நன்கு ஊற வைத்து பொரித்து எடுத்து சாப்பிட்டாலும், ஆவியில் வேக வைத்து சாப்பிட்டாலும் அதன் சுவை அல்டிமேட்டாக இருக்கும். டிரியோ மாயா, பனீர் ஸ்டீர்க் கார்டன் எங்களின் இன்னொரு சிக்னேச்சர் டிஷ்ஷில் ஒன்று. நாங்கள் மில்க் ஷேக்கில் மட்டும் ரோஸ் மில்க், மால்ட் வென்னிலா, ப்ளுபெர்ரி மில்க் ஷேக், ஃபுல்லி சாக்லெட் மில்க் ஷேக் என்று மொத்தம் பதினைந்துக்கும் மேற்பட்ட மில்க் ஷேக்கைக் கொடுத்து வருகிறோம்.

இதில் ஒவ்வொரு ப்ளேவரும் ஒவ்வொரு டேஸ்ட். ஸ்டார்டர்ஸில் ப்ரிட்டர், மசாலா பீனட் சாட், பனீர் டிக்கா ஆன் பிக், கேண்டைடு கார்னோபென்னோ பைட்சும் கொடுத்து வருகிறோம். இதுபோக நாங்கள் ப்ரட், பீட்சா, மோமோ, பர்கர், பாஸ்தா, சாண்ட்விச்சும் கொடுத்து வருகிறோம். ப்ரட்டில் கிளாசிக் கார்லிக் ப்ரட், சீஸ் கார்லிக் ப்ரட், ஸ்பைசி பனீர் ஆனியன் கார்லிக் ப்ரட்டும் கொடுத்து வருகிறோம். அதேபோலதான் பீட்சாவிலும் க்ளாசிக் மேர்கிரிட்டே பீட்சா, சீஸ்ஸி கார்ன் பீட்சா, டபுள் சீஸ் பீட்சாவும் கொடுத்து வருகிறோம். இதில் காரம், சீஸ், சேர்க்கப்படும் மசாலா என அனைத்தும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சேர்த்து சமைத்துத் தரப்படும். மோமோஸில் வெஜ் சேஸ்வான் மோமோஸ், பனீர் டிக்கா மோமோஸ், கார்ன் சீஸ் மோமோஸ், பேன் ப்ரடு பனீர் மக்கானி மோமோஸ் ஆகியவற்றையும் எங்களைத் தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கு தயார் செய்து கொடுக்கிறோம். சேன்விச்சில் கோல்டு மயோ, க்ளாசிக் சீஸ், டொமேட்டோ பேசில் மோஷாரில்லோ, சில் சீஸ் டோஸ்ட் ட்ரை ஆங்கில்ஸும் நாங்கள் தயார் செய்து கொடுத்து வருகிறோம். உணவகத்தின் அட்மாஸ்பியரும் போர்ட் கேம்களின் செட்டப்பும், உணவின் ருசியும் கண்டிப்பாக அனைவரையும் கவரும். வேலை நாட்களை விட வார இறுதியில் வாடிக்கையாளர்களின் கூட்டம் உணவகத்தில் அலைமோதுகிறது” என விழிகள் விரிய பேசுகிறார்கள்.

– சுரேந்திரன் ராமமூர்த்தி
படங்கள்: வின்சென்ட் பால்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு