பட்டர் பனீர்

தேவையானவை

பனீர் – 200 கிராம்
வெங்காய விழுது – 100 கிராம்
தக்காளி விழுது – 250 கிராம்
நறுக்கிய பச்சை மிளகாய் – 3
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
சீரகத் தூள் – அரை தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப் பால் – 1 டம்ளர்
கரம் மசாலா – அரை தேக்கரண்டி.

தாளிக்க

வெண்ணெய் – 1தேக்கரண்டி
பட்டை, லவங்கம்- சிறிது
ஏலக்காய்- 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்ததும் வெங்காய விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கிளறி, தக்காளி விழுது, மசாலா தூள்கள் போட்டு சுண்ட விடவும். பின்னர், தண்ணீர் சிறிது விட்டு அதனுடன் பனீர் துண்டுகள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கலவை நன்கு கொதிக்கத் தொடங்கும்போது, தீயைக் குறைத்து தேங்காய்ப் பால் விட்டு கிளறி விட வேண்டும். கடைசியில் வெண்ணெய் சேர்த்து இறக்கி விட்டால் சுவையான பட்டர் பனீர் ரெடி.

Related posts

தினை அரிசி வெஜிடபிள் உப்புமா

வேர்க்கடலைப்பருப்பு துவையல்

தர்பூசணி தோல் துவையல்