பூட்டு மாவட்ட மாஜி மந்திரிகள் கட்சி நிறுவனரின் பிறந்தநாளை கொண்டாடாதது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேர்தல் நெருங்கும் நேரத்தில் குமரி பாஜவில் கோஷ்டி பூசல், மாமூல் வசூல் புகார்களால் தொண்டர்கள் புலம்பிக்கிட்டு இருக்கிறாங்களாமே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குமரி பாஜ, முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் பொன்னானவர் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது அவருக்கு போட்டியா எம்பி தேர்தலில் சீட்டு கேட்டு பலரும் கிளம்பி வர்றாங்களாம்.. குமரி மாவட்ட பாஜ நிர்வாகிகள் சிலர் மீது அரசு ஒப்பந்ததாரர்களை மிரட்டி பணம் பறிப்பது, மாமூல் கேட்பது போன்ற புகார்கள் வந்ததுடன் வால்போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளதாம்.. ஆனால் புகார்களுக்கு உள்ளானவர்களுக்குதான் மாவட்ட தலைவரின் ஆதரவு இருப்பதாக தொண்டர்கள் பேசிக்கிறாங்களாம்.. இப்படி புகார்கள பொன்னானவரின் தூண்டுதலில் மாவட்ட தலைமைக்கு எதிரா செயல்படுவதாக, மாவட்ட தலைவரின் ஆதரவாளர்கள் தகவலை பரப்பி வருகின்றனராம்.. இதற்கிடையே, பல்வேறு கட்சிகளில் இருந்து மோசடி புகார்களுக்கு உள்ளானவருக்கு கட்சிப் பதவி வாங்கி கொடுத்ததுடன் அவரை அழைத்துக் கொண்டு பொன்னானவர் மாநில தலைவரை சந்தித்த படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மோசடி பேர்வழி பற்றி பலமுறை எச்சரித்தும் கேட்காமல் அவருக்கு ஆதரவளித்துள்ளார், கட்சி பெண் நிர்வாகிகள் பலருக்கும் ஆபாச தகவல் அனுப்பி செயல்பட்டு வந்துள்ள ஜெயமானவரை தற்போது போலீஸ் கைது செய்துள்ள நிலையில் குமரி பாஜவில் தடுமாற்றமும் உச்சமடைந்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கோஷ்டி பூசல், மாமூல் வசூல் புகார்கள் பாதிப்பை ஏற்படுத்தும்னு கட்சித் தொண்டர்கள் புலம்புறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘முக்கிய பொறுப்புல இருந்த மாஜி மந்திரிகள் நிறுவனரின் பிறந்தநாள கண்டுக்காம விட்டதால தொண்டர்களின் குமுறல் தலைமையிடம் வரை ஒலிக்குதாமே’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘பூட்டு மாவட்டத்தை சேர்ந்த ரெண்டு மாஜி மந்திரிங்க இலைக்கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் நடந்த கட்சியை நிறுவியவரின் பிறந்தநாளை கண்டுகொள்ளவில்லையாம்.. அதிலும், எம்பி, அமைச்சர், கட்சியில் முக்கிய பதவி என பல பொறுப்புகளை வகித்த உளறல்காரர் நலத்திட்ட உதவி, குறைந்தபட்சம் அன்னதானமாவது செய்வார்னு தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனராம்.. ஆனால், எதையும் கண்டும் காணாம எனக்கென்னன்னு இருந்துட்டாராம்.. இது கட்சித்தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்திய ஏற்படுத்தி இருக்காம்.. இருந்தாலும் பூட்டு நகரத்து பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கட்சித் தலைவரின் சிலைக்கு ‘அரசியல் சார்பற்றது’ என்ற வாசகத்துடன் பிளக்ஸ் பேனர் வைச்சாங்களாம்.. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாங்களாம்.. மாவட்டத்தில் உள்ள சில கிராமப்பகுதிகளில் கூட, இலைக்கட்சியினர், தேனிக்காரர் என இரு தரப்பிலும் முட்டை பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி என கட்சி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கி பிறந்தநாளை கொண்டாடி இருக்காங்க.. சாதாரண தொண்டனுக்கு இருக்கும் அக்கறை, பதவிகளை அனுபவித்து வரும் 2 மாஜிக்களுக்குமே இல்லையே… தற்போதைய தலைமையை திருப்திப்படுத்தினால் போதும்னு இருந்து விடுவதா, தேர்தலின்போது மட்டுமே நாங்கள் தேவையா என தொண்டர்களின் குமுறல் சத்தம் தலைமையிடம் வரை கேட்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வீட்டை காலி பண்ண புகார் கொடுக்க போன பெண்ணிடம் பணத்தை ஆட்டைய போட்ட பெண் ஆய்வாளர் கதையை சொல்லுங்க..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை புறநகர் பகுதியில் மலை அடிவார காவல் நிலையத்தில் செல்வமான பெயர்கொண்ட பெண் ஆய்வாளர் ஒருவர் பணியாற்றி வர்றார். இவர், தினமும் வேலை முடிஞ்சி வீட்டுக்கு செல்லும்போது கரன்சி நோட்டுகளுடன்தான் செல்வாராம்.. வெறுங்கையை வீசிச் சென்றால், அது அவருக்கு பெரிய அவமானமாக இருக்காம்.. இதுக்காகவே ஒவ்வொரு நாளும், யாரிடமாவது, எப்படியாவது கரன்சிய ஆட்டையைப்போட துடிக்கிறாராம்.. சமீபத்தில் இவரு பணிபுரியும் காவல் நிலையத்துக்கு ஒரு பெண்மணி புகார் மனு கொடுக்க போயிருக்கிறாரு. அதாவது, ‘‘எனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஒருவர், வீட்டை காலி செய்ய மறுக்கிறார். கேட்டால், கொலை மிரட்டல் விடுறாரு.. எனவே, வீட்டை மீட்டுக்கொடுக்க வேண்டும்னு புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தாராம்.. புகார் மனுவை படித்து பார்த்த பெண் ஆய்வாளர், ‘‘இது, ரொம்ப கஷ்டமாச்சே… இதற்குரிய தொகையை செலுத்தினால், சப்தம் இல்லாமல் வேலைய முடிச்சுடலாம்… குட்டையோ… நெட்டையோ… 30 ஆயிரத்த கொண்டுவாங்கன்னு உத்தரவு போட்டாராம்.. அதன்படி, 30 ஆயிரம் ரூபாயை ஆட்டையப்போட்டுவிட்டு, வீட்டை காலி செய்ய வைத்துள்ளாராம்.. ஆய்வாளர் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும் என்கிறார்கள் ஊர் மக்கள். இதே ஆய்வாளர், கடந்த தீபாவளி பண்டிகையின்போது, மெகா வசூல் வேட்டை நடத்தி, தனக்கு கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு நயா பைசாகூட பங்கு கொடுக்காமல் சுருட்டிக்கொண்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் தொகுதியில் போட்டிப்போட தயாராகும் தாமரை நிர்வாகியால் சேலம்காரரின் ஆதரவாளர்கள் ரொம்பவே டென்ஷனாயிட்டாங்களாமே’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தாமரை- இலைக்கட்சி இடையே ஏற்பட்ட பனிப்போரால் தாமரையுடன் இருந்த கூட்டணியை சேலம்காரர் முறித்துக்கொண்டார். எம்பி தேர்தலில் தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது என தாமரையில் இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படாத நிலையில் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் டெக்ஸ்டைல்ஸ் தொகுதியில் தாமரை கட்சி சார்பில் போட்டியிட கட்சியில் முக்கியமான பொறுப்பில் உள்ள ஒருவர் முடிவு எடுத்துள்ளாராம்.. இதற்கான வேலையில் அவர் இப்போதிருந்தே தீவிரமாக இறங்கிட்டாராம்.. டெக்ஸ்டைல்ஸ் தொகுதியில் இலைக்கட்சியில் உள்ள மாஜி அமைச்சர், மாநில அமைப்பு செயலாளர் ஆகியோர் போட்டியிட தயக்கம் காட்டுறாங்களாம்.. தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியில் தாமரை கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது என அந்த கட்சியில் முடிவு எடுக்கப்படாத நிலையில் டெக்ஸ்டைல்ஸ் தொகுதியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் முந்திக்கொண்டு போட்டியிட முன்வந்துள்ளாராம்.. இதற்காக அவர், தனக்கு கண்டிப்பா சீட்டு வழங்க வேண்டும்னு தலைமைக்கு பிரஷர் கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம்.. இந்த தகவல் தெரிய வந்ததும் சேலம்காரர் அணியில் உள்ள மாஜி அமைச்சர், மாநில நிர்வாகி ஆகியோர் உச்சக்கட்ட டென்ஷனில் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்