பஸ் நிலைய கழிவறையில் சீருடையை மாற்றிவிட்டு காதலனுடன் ஊர்சுற்ற முயன்ற பள்ளி மாணவி: போலீஸ் ரெய்டில் சிக்கியதால் பரபரப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் கழிவறையில் பள்ளி சீருடையை மாற்றி விட்டு காதலனுடன் ஊர் சுற்ற முயன்ற மாணவியை போலீசார் ரெய்டின் போது பிடித்து விசாரித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் மூலம் சிறுவர், சிறுமிகள் முதல் திருமணம் ஆனவர்கள் வரை முகம் தெரியாமல் பழகி காதலில் சிக்கி வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். குறிப்பாக மாணவிகள், அதிவேகமாக பைக்கில் சுற்றும் புள்ளிங்கோக்களின் வலைகளில் வீழ்ந்து தங்களது வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.

கடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது குமரியில் சில மாணவிகள் தங்களது காதலுடனுன் ஓட்டம் பிடித்ததை தொடர்ந்து, குமரி பள்ளிகள் மற்றும் பஸ் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் காலை, மாலை வேளைகளில் பெண் போலீசார் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று காலை வடசேரி பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது பள்ளி சீருடை அணிந்த மாணவி கழிவறைக்கு சென்று விட்டு, கலர் உடையில் வெளியே வந்தார். இதனையடுத்து மாணவியை, போலீசார் கண்காணித்தனர். அப்போது அங்கு வந்த வாலிபருடன், மாணவி கன்னியாகுமரி செல்லும் பஸ்சில் ஏறினார். இதனையடுத்து அந்த ஜோடியை மடக்கிய போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். அப்போது, மாணவியின் வயது 16, அருகுவிைளயை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தற்போது 11ம் வகுப்பு பயில்வதும், வாலிபருக்கு வெள்ளமடம் என்பதும், 19 வயதான அவர் தற்போது தான் கல்லூரியில் முதலாமாண்டு படிக்க சேர்க்கை பெற்றுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

மாணவர் ஆலயத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இயக்குநராக இருந்து வருகிறார். அப்போது அங்கு பயில சென்ற மாணவிக்கும், மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதும், அதன் பின்னர் ஜோடியாக ஊர் சுற்றி வருவது தெரிய வந்தது. இதனையடுத்து 2 பேரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பெற்றோரிடம் அறிவுரைகள் கூறி போலீசார் ஒப்படைத்தனர்.

8ம் வகுப்பு ரோமியோ: அண்ணா பஸ் நிலையத்தில் பள்ளி சீருடையில் மாணவி ஒருவர் ஒவ்வொரு பஸ்சாக ஏறி இறங்கி உள்ளார். அவரது பின்னால் சிறுவன் ஒருவனும் சென்று உள்ளார். இதனையடுத்து மாணவியிடம் எதற்காக பஸ்களில் ஏறி இறங்குகிறாய் என்று கேட்டபோது, இன்ஸ்டா முகவரி கேட்டு, சுற்றி வருவதாக கூறி உள்ளார். பின்னால் வந்த சிறுவனிடம் கேட்டபோது, 8ம் வகுப்பு பயின்று வருவது தெரிய வந்தது. இதனையடுத்து மாணவரின் பெற்ேறாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறுவனை எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பினர்.

திருமண ஜோடி சிக்கியது: இதேபோல் சந்தேகப்படும் படி நின்ற மற்றொரு ஜோடியை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது, பெண்ணிற்கு ஊர் இறச்சகுளம் என்றார். நாகர்கோவிலில் உள்ள ஜவுளி கடையில் பணியாற்றி வருகிறாராம். இளம் பெண்ணின் வீட்டிற்கு அருகே தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையை சேர்ந்த 21 வயது வாலிபர் தங்கி இருந்து உணவு பொருள் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
அப்போது 2 பேருக்கும் இடையே காதல் ஏற்பட்டு உள்ளது. இன்று வெளியூர் சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து வடசேரி பஸ் நிலையம் வந்த போது, போலீசாரிடம் சிக்கினர். இதில் வாலிபருக்கு தாய், தந்தை இல்லை. பாட்டியுடன் வசித்து வருகிறார். தொடர்ந்து பாட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், இளம் பெண்ணிற்கு தந்தை இல்லை. தாயார் மட்டும் தான். இதனையடுத்து இளம் பெண்ணின் தாயாருக்கும் போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Related posts

ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல்

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு