நேபாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள்: தேடும் பணி தீவிரம்

காத்மாண்டு: நேபாளத்தில் கனமழை காரணமாக 2 பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் கனமழை காரணமாக 2 பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

மத்திய நேபாளத்தில் மடன் – அஸ்ரித் நெடுஞ்சாலையில் பேருந்துகள் சென்றுகொண்டிருந்தபோது மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. மண்சரிவு ஏற்பட்டதில் திரிசுலி ஆற்று வெள்ளத்தில் 2 பேருந்துகளும் அடித்துச் செல்லப்பட்டன. ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகளில் ஓட்டுனர்கள் உள்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்திருந்தனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகளையும் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

 

Related posts

மேகதாது அணை விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என பிரதமர் கூறியிருப்பது தற்கொலைக்கு சமம் :அமைச்சர் துரைமுருகன்

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தவர்களை சிபிஐ. உதவியுடன் கைது செய்ய வேண்டும் : சிபிசிஐடி-க்கு ஐகோர்ட் உத்தரவு!!

செந்தில் பாலாஜியின் காவல் 52வது முறையாக நீட்டிப்பு..!!