பெரியபாளையம் அருகே சென்டர் மீடியனில் பஸ் மோதல்: பயணிகள் தப்பினர்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே சென்டர் மீடியனில் தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். ஆந்திர மாநிலம், நந்தியால் பகுதியில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு ஒரு தனியார் பஸ் நேற்றிரவு புறப்பட்டது. நாயப் (45) என்பவர், பஸ்சை ஓட்டி வந்தார். சிறுவர்கள், பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் பஸ்சில் பயணம் செய்தனர். நள்ளிரவில் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். பெரியபாளையம் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் வந்தபோது தண்டலம் பகுதியில் திடீரென ஒரு மாடு குறுக்கே வந்தது.

உடனே டிரைவர் பிரேக் போட்டார். பஸ் கட்டுப்பாட்டை இழந்து சென்டர்மீடியனில் வேகமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க அச்சு முறிந்து டயர்கள் கழன்று ஓடியது. பஸ், சென்டர்மீடியன்மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அலறி துடித்தனர். இருப்பினும் பயணிகள் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Related posts

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை; கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!