மதுராந்தகம் அருகே பரபரப்பு கல்வீசி பேருந்து கண்ணாடி உடைப்பு

மதுராந்தகம்: பேருந்து நிற்காததால் கண்ணாடியை உடைத்த மாணவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நெல்வாய் கூட்ரோடு அருகே உள்ள இந்திராபுரம் கிராமத்தில் நேற்று காலை 8 மணிக்கு மதுராந்தகத்திலிருந்து உத்திரமேரூர் நோக்கி (வழித்தடம் 17) என்ற அரசு பேருந்து சென்றது. அது இந்திராபுரம் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் கற்களை எடுத்து பேருந்தின் கண்ணாடி மீது வீசியதாக கூறப்படுகிறது. இதனால், பேருந்தி பின்பக்க கண்ணாடி உடைந்தது.இதுகுறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் படாளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் பெற்றோர், மாணவர்களிடம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.

Related posts

நினைவில் கொள்ளக்கூடிய இந்த வெற்றிக்கு இந்திய வீரர்கள் தகுதியானவர்கள்: பாகிஸ்தான் ஜாம்பவான்கள் வாழ்த்து

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

நீர்வளம், பொதுப்பணி, சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு உத்தரவு