டீசல் விலை அதிகரிப்பால் ரூ.295 கோடி நஷ்டம் : பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை 15% முதல் 20% வரை உயர்த்தியது கர்நாடகா!!

பெங்களூரு : கர்நாடகாவில் டீசல் விலை அதிகரிப்பால் பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க இயலாமல் போனதாக அம்மாநில அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.295 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை 15% முதல் 20% வரை உயர்த்துவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்தது. இந்த கட்டண உயர்வு, மாநில மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடக அரசு பேருந்து, மாநகர போக்குவரத்து கழக தலைவர் ஸ்ரீனிவாஸ், கட்டண உயர்வு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகே கட்டண உயர்வு உயர்த்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019ல் 60 ரூபாயாக இருந்த டீசல் விலை தற்போது ரூ. 93 அளவிற்கு விற்பனை ஆகிறது என்றும் இதன் விளைவாக பேருந்துகளின் இயக்கச் செலவு அதிகரிப்பு மற்றும் ஊழியர்களின் சம்பள உயர்வு என நெருக்கடியை சமாளிக்க பேருந்து டிக்கெட்டுகளின் கட்டண உயர்வு தவிர்க்க இயலாமல் போனதாக ஸ்ரீனிவாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

டோலி கட்டி தூக்கி செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு

பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க திட்டம்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,500 கனஅடியாக உள்ளது