கொடைக்கானல் சாலையில் அந்தரத்தில் தொங்கிய பஸ்: 30 பயணிகள் தப்பினர்

பெரியகுளம்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து கொடைக்கானலுக்கு நேற்று காலை சென்று கொண்டிருந்தது. கொடைக்கானல் மலைச்சாலை அடிவாரம் பகுதியில் டம்டம் பாறை அருகே பஸ் சென்றபோது, வத்தலக்குண்டு நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி, பஸ்சின் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ், சாலையோர தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது. இதனால் பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நித்யா என்ற பெண் தூக்கி வீசப்பட்டு 100 அடி பள்ளத்தில் விழுந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பஸ்சில் இருந்த பயணிகளை பாதுகாப்பாக கயிறு கட்டி மீட்டனர். 100 அடி பள்ளத்தில் படுகாயங்களுடன் இருந்த பெண்ணை, தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி மேலே தூக்கி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்