பேருந்துகளில் பயணிகளிடம் ரூ.2000 நோட்டுகளை வாங்கக் கூடாது… நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உத்தரவு

சென்னை : நாளை முதல் ரூ.2000 நோட்டுகளை பயணிகளிடம் இருந்து வாங்கக்கூடாது என்று அரசு பேருந்து, நடத்துனர் மற்றும் கிளை மேலாளர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த நோட்டுகள், செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்தது. இதனை தொடர்ந்து வங்கிகள் மூலமாக 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் நடவடிக்கை தொடங்கியது.

கிட்டத்தட்ட 5 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டும், பலர் இன்னும் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றியும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும் வருகின்றனர். இந்த சூழலில் இன்னும் 4 நாட்களில் ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு முடிகிறது.இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை 28ம் தேதிக்கு பிறகு பொதுமக்கள் பேருந்துகளில் கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணிகளிடமிருந்து ரூ.2000 நோட்டுகளைப் பெற்றால், அதற்கு நடத்துனர்களே பொறுப்பு என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது