அரசுப்பேருந்து ஒட்டுநர், நடத்துநருக்கு சீருடை, பேட்ஜ் கட்டாயம்: மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியின்போது கண்டிப்பாக சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் எனவும் அதனை போக்குவரத்துக்கழக கிளை மேலாளர்கள் கண்காணிக்க வேண்டுமென மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவுருத்தியுள்ளது.

மேலும் வெளியான அறிக்கையில்; “மாநகர் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த அனைத்து பணிமனைகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தங்கள் பணியின் போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது மேற்படி ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பேட்ஜ் அணியாமல் பணிசெய்வது தெரியவருகின்றது. ஆகவே ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அனைவரும் பணியின் போது சீருடை மற்றும் கேத்தும் அணிந்து பணிபுரிய வேண்டும் என மீண்டும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இதனை கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: நீதிமன்றம் அனுமதி

குமரியில் நீர்நிலை கரையோரம் கொட்டப்படும் குப்பைகள்; சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு

ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி