புல்லரம்பாக்கம் திரவுபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா கோலாகலம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கத்தில் திரவுபதி அம்மன் ஆலய ஆடி மாத தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 10ம் தேதி கலசம் எடுத்தல் நிகழ்ச்சியும், 11ம் தேதி கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. 12ம் தேதி பக்காசூரன் சோறு வழங்குதல் மற்றும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும், 13ம் தேதி திரவுபதி அம்மன் திருக்கல்யாணமும் மற்றும் அம்மன் வீதி உலாவும் நடந்தது. 14ம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம் மற்றும் வீதியுலாவும், 15ம் தேதி கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும், 16ம் தேதி சைத்தன் ஊர்வல நிகழ்ச்சியும் நடந்தது. 17ம் தேதி தர்மராஜா சுவாமி ஊர்வலம் மற்றும் அன்னதான நிகழ்ச்சியும், 18ம் தேதி மாடுபிடி சண்டை மற்றும் கிருஷ்ணர் வீதியுலா, 19ம் தேதி அரவான் தலையெடுத்தல் நிகழ்ச்சி மற்றும் இரவு தெருக்கூத்தும் நடந்தது.

10ம் நாளான நேற்று அலகு பானை எடுத்தல் நிகழ்ச்சியும் மாலையில் தீமிதி திருவிழாவும் நடந்தது. விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதில், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன், துணைத் தலைவர் பேபி மனோகரன், முன்னாள் கவுன்சிலர் பி.கே.இ.கபிலன், கலைச்செல்வி மோகனசுந்தரம் வார்டு உறுப்பினர் தமிழ்புதல்வன் மற்றும் புல்லரம்பாக்கம், திருவள்ளூர், நெய்வேலி, சதுரங்கப்பேட்டை, பூண்டி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் 8 மணிக்கு மேல் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பி.கே.ஏழுமலை, டி.புத்தமணி, கே.வி.சண்முகம், எஸ்.தர், எஸ்.சரத்குமார், ராஜ்மோகன், ஏசுராஜ், எம்டி மதியழகன் ஏ.ராஜ்குமார், எம்.அன்பில் சுமன் மற்றும் விழா குழுவினர், கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்