பஃப்ஃபர் (BUFFER)

இன்று ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால் சமூக வலைத்தளக் கணக்குகள் மட்டும் ஏராளமாக இருக்கின்றன. முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், லின்க்ட் இன், என லிஸ்ட் அதிகம். ஒரே புகைப்படம், அல்லது வீடியோ, அல்லது வெறும் பதிவு எனில் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு விதமாக போஸ்ட் செய்ய வேண்டும். இதைத்தான் சுலபமாக்குகிறது ‘Buffer’ ஆப். உங்களிடம் எத்தனை சமூக வலைத்தளப் பக்கங்கள் இருப்பினும் அத்தனையையும் ஒரே இடத்தில் பார்க்க, போஸ்ட் செய்ய என ஒரே வேலையாக்கி எளிமையாக்குகிறது. இந்த செயலி. குறிப்பாக தொழில் சார்ந்த பலதரப்பட்ட சமூக வலைத்தளக் கணக்குகளில் புரமோஷன்கள் பதிவிட , வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் எல்லா கணக்குகளிலும் செய்திகள் பகிர என இந்த பஃப்ஃபர் செயலி உதவுகிறது. Buffer.inc நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செயலி இலவசமாகவே ஏராளமான பயன்களைக் கொடுத்தாலும் தொழில் சார்ந்த கமர்சியல் சமூகக் கணக்குகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்துகையில் மேலும் நிறைய பிரீமியம் ஆப்ஷன்களையும் அள்ளிக் கொடுக்கிறது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு