எருமைவெட்டி அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்காக வெளியூர் செல்லும் 10 மாணவர்களுக்கு சைக்கிள்

*தலைமை ஆசிரியர் சொந்த செலவில் வழங்கினார்

செய்யாறு : செய்யாறு அடுத்த எருமைவெட்டி அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்காக வெளியூர் செல்லும் 10 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் சைக்கிள் வழங்கினார்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, எருமைவெட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மழலையர் வகுப்புகளில் 20 மாணவ, மாணவிகளும், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 83 மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளியில் தற்போது 8ம் வகுப்பு படித்து முடித்த 4 மாணவிகள் மற்றும் 6 மாணவர்கள், வரும் கல்வியாண்டில் உயர்நிலை வகுப்புகளில் பயில வெளியூர் செல்ல வேண்டி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சு.பெருமாள் ஆண்டுதோறும் 8ம் வகுப்பு படித்து முடித்து செல்லும் மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் சைக்கிள்களை வாங்கி வழங்கி வருகிறார்.

அதன்படி, இந்தாண்டு 10 மாணவ, மாணவிகளுக்கு ₹55 ஆயிரம் மதிப்பில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மனோகர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சு.பெருமாள் வரவேற்றார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், மாவட்ட கவுன்சிலர் ஏ.பி.சுப்ரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எம்எல்ஏ ஒ.ஜோதி தலைமை ஆசிரியர் பெருமாள் ஏற்பாடு செய்த 10 சைக்கிளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து, இந்த பள்ளியில் பழுதடைந்து உள்ள கட்டிடத்தை இடித்துவிட்டு, வரும் நிதியாண்டில் புதிய வகுப்பறைகள் கட்டித்தருவதாக உறுதியளித்தார். தொடர்ந்து, பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரத்தை எம்எல்ஏ சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!