பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை; மாநில பெயர்களை குறிப்பிடவில்லை என்றால் அது புறக்கணிப்பு என்று ஆகிவிடாது.! நிர்மலா சீதாராமன் விளக்கம்

டெல்லி: ஒன்றிய பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். 2024 – 2025ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்பட காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த சிறப்பு நிதியும் ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

குறிப்பாக பாஜக கூட்டணி கட்சிகளான ஆந்திரா மற்றும் பீகாருக்கு மட்டுமே அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டும் விதமாக ‘ஒருதலைபட்சமான பட்ஜெட்’ என எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. இதனையடுத்து ஒன்றிய பட்ஜெட்டை எதிர்த்து இன்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஒருதலைபட்சமான பட்ஜெட் என்ற விமர்சனம் குறித்து விளக்கம் அளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஒன்றிய பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை.

பட்ஜெட்டில் எல்லா மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட வாய்ப்பு கிடைப்பதில்லை. பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடாததால், புறக்கணிப்பு என்று அர்த்தமில்லை. மகாராஷ்டிராவின் பெயரை பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை, ஆனால் ரூ.76 ஆயிரம் கோடி மதிப்பில் மிகப்பெரிய துறைமுகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயரை குறிப்பிடவில்லை என்றால், எந்த நிதியும் அந்த மாநிலங்களுக்கு கிடையாது எனக் கூறுவது தவறு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்